மனிதரை போல யோசித்து அடுத்த நொடியே மாடு செய்த செயல்....! ஐந்தறிவு ஜீவனுக்குள் இப்படி ஒரு ஞானமா?
மனிதரை போல யோசித்து செயல்பட்ட மாடு ஒன்றின் காணொளி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.
பொதுவாக மனிதர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு.
அதேபோல் காளை மாட்டை விவசாயத் தேவைக்காக வளர்ப்பார்கள். காளை மாடுகளை வண்டி கட்டி இழுத்துச் செல்லவும் விவசாயிகள் பயன்படுத்துவார்கள்.
Mesmerising ? pic.twitter.com/52uJcwGPza
— Parvesh Sahib Singh (@p_sahibsingh) June 22, 2020
அந்த வரிசையில் இங்கே ஒரு விவசாயி புல் வெட்டிக் கொண்டுவர தன் காளையை, வண்டியில் பூட்டிக் கொண்டு சென்றார். அவர் வேறு ஒரு வேலையாக அவசரமாகச் செல்ல வேண்டி வந்துவிட்டது.
உடனே தன் மாட்டைப் பார்த்து நீ வீட்டுக்கு போயிடு ராசா என சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
இதை சுற்றியிருந்தவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருக்க அந்த காளை மாடோ, தானாகவே வண்டியின் முன்பகுதியில் இழுத்துச் செல்வதற்குக் கணக்காகத் திரும்பிக் கொண்டு தன் கால் முட்டியைக் குனித்து தானே வண்டியைத் தூக்கி தன் கழுத்துப் பக்கம் போட்டுவிட்டு வீடு நோக்கிச் சென்றது.
மனிதர் போல சிந்தித்து செயல்ப்பட்ட இந்த மாட்டின் வீடியோ மனிதர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.