இறப்புக்கு பின்னரும் இளைஞர்கள் மத்தியில் வைரல்: நடிகர் மாரிமுத்து என்ன அறிவுரை சொல்லியிருக்கிறார்?
சமீபத்தில் டப்பிங் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்து இளைஞர்களுக்காக வழங்கிய அறிவுரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகின்றது.
ஒருமுறை மாரிமுத்து யூடியூப் சேனலொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தனது திருமணம், மனைவி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இது அவரின் இறப்புக்கு பின்னர் அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக இளைஞர்களுக்கு என்னோட அறிவுரை, அப்பா அம்மா பேச்சை கேட்கக் கூடாது. அப்படி கேட்டா அப்பா அம்மாவத்தான் இருப்பாங்க. அதைவிட உயரத்துக்கு போக முடியாது. அப்பா, அம்மாவ யார் மீறுறாங்களோ அவங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க… ஆனா மீறி பாசிட்டிவ் ரூட்ல போயிடணும், ஒயின்ஷாப் பக்கம் போகக் கூடாது. என அவர் கூறிய அறிவுரை மிகவும் வித்தியாசமானதாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் மாறியுள்ளது.
மாத்தி யோசிக்க வைக்கும் அறிவுரை
எல்லோரும் ஒரே விசயத்தை அறிவுரை சொல்வதாக நினைத்து சொல்லிக்கொண்டிருக்கும் போது இவரின் இந்த அறிவுரை சற்று புதுமையானதாகவும் வரவேற்கத்தக்கதாகவும் அமைகின்றது.
அப்பானாலே இப்படி தான் இருப்பாங்க என்ற சமூகத்தின் கட்டுப்பாட்டை தகர்தெறிவதாக இவரின் அறிவுரை காணப்படுகின்றது.
உதவி இயக்குனர், குணசித்திர நடிகர் என பல பரிமாணங்கள் இவருக்கு இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம், இவரை தமிழகம் முழுவதும் உள்ள இல்லங்களில் கொண்டு போய் சேர்த்தது.
தற்போது இவரின் மாத்தி யோசி என்பது போல் இருக்கும் அறிவுரை இளைஞர்களின் சிந்தனையை மாத்திரமன்றி பெற்றோர்களின் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றது.
மேலும் அவரது ’ஏய் இந்தாம்மா’ வசனம் குழந்தைகள் மத்தியில் கூட பிரபலம் ஆகியது. மாரிமுத்து திடீர் மறைவுக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாரிமுத்து மறைவை தொடர்ந்து அவரின் இந்த வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |