நிக்சன் உருவ கேலி செய்தமைக்கு மன்னிப்பு கேட்கவில்லை.. வினுஷாவின் உருக்கமான பதிவு
வினுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த பதிவு இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடந்த ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் பல்வேறு தருணங்களில் பேசிய வார்த்தைகள் குறித்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
அவற்றை பேசிய போட்டியாளர்கள் முன்வந்து அவர் அதனை எந்தச் சூழலில் என்ன காரணத்துக்காக பேசினார் என்பதை சக போட்டியாளர்களுக்கு விளக்க வேண்டும்.
அந்த வகையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து நிக்சன் கூறிய சில வார்த்தைகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
அது குறித்து விளக்கமளிக்க வந்த நிக்சன், தான் அவ்வாறு பேசியது வினுஷாவுக்கே தெரியும் என்றும், தவறான நோக்கத்தில் தான் அப்படி சொல்லவில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில், நிக்சன் பேசியது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்னத்திரை நடிகை வினுஷா உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வினுஷாவின் பதிவு
முதல் வாரத்தில், எனக்கும் நிக்சனுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது. உண்மையாகவே நான் அவரை ஒரு தம்பியாக நினைத்தேன்.
நான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது நிக்சன் என்னை பாடி ஷேமிங் செய்தது குறித்து என்னிடம் அவர் மன்னிப்பு கேட்கவோ அல்லது அதுகுறித்து பேசவோ செய்யவில்லை. என்னிடம் அவர் இதனை சொல்லிவிட்டதாகவும், எனக்கு இது அனைத்துமே தெரியும் என்று தவறாக தகவலை நிக்சன் சொல்கிறார்.
எனக்கு எதுவும் தெரியாது. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகே இதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன். ஒருவேளை இப்போது நிக்சன் மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட, அது அவரை ஒரு நல்ல மனிதனாக ஆக்கிவிடாது.
எனக்காக குரல் எழுப்பிய விசித்ராவுக்கு நன்றி. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நிக்சன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்து நான் அவரை என் தம்பியாக கருதினேன். என்னைப் பற்றி அவர் கூறிய கருத்துகளை பார்த்த பிறகு அவர் மீது வைத்திருந்த அத்தனை மரியாதையும் போய்விட்டது.
இந்த வார இறுதியில் கமல் இந்த பிரச்சினை குறித்து பேசுவார் என்று நம்புகிறேன். இந்த பிரச்சினையில் எனக்காக பேசிய அனைவருக்கும் நன்றி” என்று வினுஷா அப்பதிவில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |