அலமாரியை அழகாக அடுக்கி 50 ஆயிரம் வரை சம்பாதிக்கும் மாணவி!
இங்கிலாந்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் அலமாரியை அடுக்கி ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எலா மக்ம ஹோன் என்ற பெயர் கொண்ட அந்த மாணவி அலமாரிகளில் உள்ள துணிகளை அழகாக அடுக்கி வைப்பதன் மூலம் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறார்.
மேலும் அவர் வீட்டில் அலங்கோலமாக அலமாரிகள் இருந்ததால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என விளம்பரத்தி சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னால் அடுக்கும் வேலையை நாள் முழுவதும் செய்ய முடியும்.
ஏனெனில் எனக்கு ஒழுங்காக அடுக்க மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
மேலும் ஒரு அலமாரியை அடுக்கி முடிக்க குறைந்தது 3 மணி நேரமாகும் என்றும், கூடுதல் நேரம் அந்த அலமாரியின் அளவை பொருத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எலா தனது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அலமாரியை அடுக்கும் போது இதையே தொழிலாக மாற்றிக்கொள்ளலாம் என்ற ஐடியா வந்ததாக தெரிவித்தார். இது போன்ற பல சுவாரஷ்யங்களின் தொகுப்பாக வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது.