Bigg Boss: பிக்பாஸ் மீதே வழக்கு தொடர்ந்த வினோத்... கிடைத்த பதிலடி என்ன தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்றமாக வீட்டை மாற்றியுள்ள பிக்பாஸ் சக போட்டியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்து அதனை வாதாடி தீர்ப்பு வழங்குவதை டாஸ்க்காக வைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரத்தில் தலைவராக அமித் இருந்துவரும் நிலையில், பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளது.
டாஸ்க் என்னவெனில் போட்டியாளர்கள் இத்தனை நாட்கள் இருந்துள்ள நிலையில், யார் மீது தனக்கு மனஸ்தாபம் உள்ளது என்பதை வைத்து அவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு நீதிமன்றமாக மாறியுள்ளது.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது புகாரை அளித்துள்ள நிலையில், வினோத் தனது புகாரை அளிக்க வந்துள்ளார். அதாவது பார்வதி, கம்ருதின் செய்த தவறுக்கு வீட்டில் உள்ள பால், முட்டையை எடுத்த பிக்பாஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை பிக்பாஸிடம் கொடுத்த போது... சிறிது நேரம் அமைதியாக இருந்த பிக்பாஸ், இருங்க எனது வக்கிலீடம் கேட்டு வருகின்றேன் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு நகைச்சுவைக்காக வாதாடுவதற்காக கொண்டு வந்ததாகவும், தாங்கள் கூறினால் மாற்றிக் கொள்வதாகவும் வினோத் பதற்றத்தில் கூறியுள்ளார்.
சிறிது நேரம் காத்திருந்த வினோத்திற்கு அடுத்த பதில் வந்தது... தனது வக்கிலிடம் பேசிட்டேன்... இந்த கேஸ் கோர்ட்டில் நிக்காது என்று கூறிவிட்டார்.. காரணம் இது போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் மீது கொடுக்க வேண்டிய புகார் என்று கூறியுள்ளார்.

அந்த அடிப்படையில் என் மேலுள்ள கேஸ் செல்லாது... நகைச்சுவையாக சக போட்டியாளர்கள் மீது எதாவது வழக்கு இருந்தால் சொல்லுங்க என்றார்... வினோத் பதற்றத்தில் வெளியே போய் எழுதிட்டு வந்துடுறன் பிக்பாஸ் என்றார்.
அதற்கு பிக்பாஸ், ஏன் நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே... இங்கேயே எழுதுங்க... உடனே வினோத் முயற்சி செய்து எழுதுவதற்கு தயாரானார்.. ஆனால் முடியாததால் பிக்பாஸிடம், பிக் பாஸ் பிக்பாஸ் கொஞ்சம் திங்க் பண்ணிட்டு வாறேன் என்று திணறினார். பிக்பாஸ் சரி என்று அவரை அனுப்பி வைத்து சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |