Vinesh Phogat: மக்கள் கொடுத்த பரிசு! வினேஷ் போகத்தின் உருக்கமான பதிவு
வினேஷ் போகத் தன் சொந்த நாட்டிற்கு செல்லும் போது அவருக்கு அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்கப்பதக்கத்தை பரிசாக அளித்து வரவேற்றுள்ளனர்.
வினேஷ் போகத்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கூடுதல் எடை காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகட். 2024 ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகட் தகுதி பெற்று இருந்தார்.
போட்டி நாள் அன்று காலையில் அவரது உடல் எடை 50 கிலோவுக்கு 100 கிராம் கூடுதலாக இருந்தது. இதை அடுத்து அவர் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிரான சட்டப் போராட்டத்திலும் அவர் தோல்வி அடைந்தார்.
இதனால் மனக்கவலை அடைந்த வினேஷ் போகட் விளையாட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். இப்பபோது இவரின் வயது 29 ஆக உள்ளது.இந்த நிலையில் இவர் நேற்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இப்படி எந்த வீரருக்கும் யாரும் செய்திருக்க மாட்டார்கள்.இந்த வரவேற்கு அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இவரின் தங்கப்பதக்கம் பறிபோனது. இதனால் நாடே பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.
தொடர்ந்து வெள்ளிப் பதக்கம் கோரி அவர் மனுத் தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின்னர் இவர் தன் குடுத்பத்தினரை பார்த்தார். பின்னர் அவர்களால் வெளியே இருந்த ஒரு காருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் மேல் உட்கார வைக்கப்பட்டார்.
கூடியிருந்த மக்கள் கோஷங்களை எழுப்பி, ரோஜா இதழ்களைப் பொழிந்து, சாமந்தி மலர் மாலைகளால் அவரை வரவேற்றனர். பாசத்தை வெளிப்படுத்தியதால், மல்யுத்த வீரர் உடைந்து, கண்ணீரைத் துடைத்து, கூட்டத்தை அங்கீகரிப்பதற்காக கைகளைக் கூப்பினார்.
விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் ஹூடா, போகத்தை வரவேற்றார். பாஜக உறுப்பினரும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங்கும் உடனிருந்தார். இப்படி வரவேற்பால் உணர்ச்சி வசப்பட்ட வினேஷ் போகட் அவரின் உருக்கமான கருத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறியது “எனக்கு தங்கப் பதக்கம் கொடுக்கவில்லை என்றால் என்ன, இங்குள்ளவர்கள் அதை விட அதிகமாக அன்பை கொடுத்துவிட்டார்கள். நான் பெற்ற அன்பும் மரியாதையும் ஆயிரம் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கது, ”என்று அவர் கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |