10 பெண்களுடன் உறவு! தகாதபடி பேசிய நடிகர் மனைவியை பிரிந்தார்
என் மனைவியை நான் விவாகரத்து செய்து விட்டேன் என பிரபல வில்லன் நடிகரான விநாயகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விநாயகன்
கேரளாவைச் சேர்ந்தவர் விநாயகன், இவர் மலையாள திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.
இவர் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'மாந்திரீகம்' என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் வில்லனாக எண்ட்ரி கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் விநாயகன்.
இதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ‘மரியான்’ படத்தில் வில்லனாக நடித்தார்.
மனைவியை விவாகரத்து செய்த விநாயகன்
இந்நிலையில் நடிகர் விநாயகன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.
அந்த பதிவில்,
என் மனைவி பபிதாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விநாயகன் மீது கடந்த ஆண்டு மாடல் அழகி ஒருவர் மீடூ புகார் கொடுத்தார்.
அது குறித்து நடிகர் விநாயகன் பேசுகையில், இதுவரை நான் 10 பெண்களுடன் உறவு வைத்தேன், ஆனால் அந்த பெண்களின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்தது என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தான் அவரது குடும்பத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி, தற்போது விவாகரத்து வரை தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.