சென்னையில் புத்தகம் படிக்கும் விநாயகர்! 35 ஆயிரம் ஸ்கெட்ச் பேனாவால் ஜொலிக்கும் புகைப்படம்
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்யைில் படிப்பு ரொம்ப முக்கியம் குமாரு என்பதற்கு ஏற்ப படிக்கும் விநாயகரை செய்து அசத்தியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
இன்று விநாயகரை ஒவ்வொரு வீட்டிலும் புதிதாக சிலை வாங்கி வணங்குவதுடன் அதனை 3 தினங்களுக்கு பின்பு ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விடுவார்கள்.
களிமண்ணால் பிள்ளையாரை செய்து ஒரு 3 நாட்கள் அதனை வீட்டில் வைத்திருப்பர். ஏன் அன்றே கரைக்க கூடாதா என்றால் உடனே கரைக்கும் போது மண் பச்சையாக செய்தது போல் இருக்கும் அது தண்ணீரில் எளிதில் கரைந்து ஓடி விடும்.
ஆனால் அதனை 3 நாட்களுக்கு பின்னர் இறுகி போன பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ, ஓடும் நீரிலோ, எதில் போட்டாலும் கொஞ்ச தூரம் ஓடும் கரையாது.
அப்படியே தங்கி விடும். இப்படியே ஆங்காங்கே களிமண் சென்று மண்ணரிப்பை தடுக்கும் என்ற காரணத்தால் தான் பெரியவர்கள் 5 பூத தத்துவத்தையும் அதில் அடக்கி உலக நன்மைக்காக இப்படி ஒரு செயலை வழிபாட்டு முறைக்காக நமக்கு அளித்தார்கள்.

சென்னையில் படிக்கும் விநாயகர்
சென்னை மணலியில் 35,000 ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் 800 ஜாமென்ட்ரி பாக்ஸ்களால் செய்யப்பட்ட, 18 அடி உயரம் கொண்ட புத்தகம் படிக்கும் விநாயகர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பூஜை முடிந்தபின் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ்கள், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

