விநாயகர் சதுர்த்தி! எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்? அவசியம் இதெல்லாம் இருக்கணுமாம்
விநாயகர் சதுர்த்தி தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 25ம் தேதியான நாளை வெள்ளிக்கிழமை, செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் நாடு முழுவதும் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் பூஜை செய்ய சரியான நேரம்
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம்.
விநயாகர் அவதரித்த அந்த நாள் முழுவதும் மிக நல்ல நேரமாக இருந்தாலும், பூஜை செய்ய மிகவும் நல்ல நேரம் எது என்று பார்க்கலாம்.
காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை
அணிவிப்பதற்கு: எருக்கம் பூக்களால் ஆன மாலை
அர்ச்சிப்பதற்கு: அருகம் புற்கள்
நிவேதனத்திற்கு: மோதகம் என்று சொல்லப்படும் அரிசிமாவினால் ஆன கொழுக்கட்டை
வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை: நெற்றிப்பொட்டில் கைகளால் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுதலும் நன்று.
கணபதி ஸ்லோகம் 1
ஐந்து கரத்தனை யானை
முகத்தனை இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக்
கொழுத்தினைப் புந்தியில் வைத்து
அடி போற்றுகின்றேனே.
கணபதி ஸ்லோகம் 2
அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம்
அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
கணபதி ஸ்லோகம் 3
கணபதி என்றிடக் கலங்கும்
வல்வினை கணபதி என்றிடக் காலனும்
கைதொழும் கணபதி என்றிடக் கருமம்
ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே.
கணபதி ஸ்லோகம் 4
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
கணபதி ஸ்லோகம் 5
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் –
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.
கணபதி ஸ்லோகம் 6
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்!
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.