நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்காக பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார்.
படம் வெளியான பின்னரும் அவர் வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை, காசோலையாக வழங்கிய போது வங்கி கணக்கில் பணமில்லை என கூறி திருப்பி வந்துள்ளது.
இதனையடுத்து 4.5 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கை பதிவு செய்தார் பைனான்சியர் கோபி.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், விமல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வாங்கிய பணத்தை திருப்பி தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
உடனடியாக விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்தார்.
