நாவூரும் சுவையில் கிராமத்து ஸ்டைல் சீரக மட்டன் குழம்பு - இப்படி செய்தா கொஞ்மும் மிஞ்சாது!
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விரும்ப பட்டியலில் மட்டன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றது. குறிப்பாக பிரியாணி வகைகளிலும் மட்டன் பிரியாணிக்கு இருக்கும் மவுசே தனி.
மட்டனை பல்வேறு வகைகளிலும் சுவையாக சமைக்க முடியும். அந்தவகையில், வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சன்டே ஸ்பெஷலாக அசத்தல் சுவையில், கிராமத்து பாணியில் சீரக மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
இடிப்பதற்கு தேவையானவை
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 சிறிய விரல் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
கல் உப்பு - 1 டீஸ்பூன்

பிற பொருட்கள்
மட்டன் - 500 கிராம்
விழுதுக்கு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 6 (விதைகளை நீக்கியது)
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை

முதலில் மட்டனை நன்கு கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் இடி உரலில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். இடித்த கலவையை மட்டனுடன் சேர்க்க வேண்டும்.
அதனுடன் நெல்லிக்காய் அளவு புளி, விதைகள் நீக்கி நறுக்கிய 6 வரமிளகாய், சீரகத் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் மட்டனை நன்றாக கிளறி வதக்கவும்.
அதன் பின் ½ கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மிதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவிடவும். விசில் முழுவதும் அடங்கியதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து மட்டனில் உள்ள நீர் முழுவதும் வற்றும் வரை கொதிக்க விடவும்.
நீர் வற்றியதும் மிளகுத் தூள் மற்றும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான கிராமத்து ஸ்டைல் சீரக மட்டன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |