onion chutney: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சட்னி... கிராமத்து பாணியில் எப்படி செய்வது?
பொதுவாகவே வெங்காயம் இந்திய சமையலில் முக்கிய இடம் வகிக்கின்றது. சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் சரி சமையலில் சுவையை அதிகரிப்பதில் வெங்காயத்தின் பங்கு இன்றியமையாதது.
வெங்காயம் உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வெங்காயத்தில் அதிகளவில் நார்ச்சத்து உள்ளதால் , இது செரிமானத்திற்கு உதவுகிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
நார்ச்சத்து மலச்சிக்கல், மூல நோய் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் வெங்காயம் உதவுகின்றது.
Karuppu Ulunthu Chutney: அசத்தல் சுவையில் சட்னி வேண்டுமா? கருப்பு உளுந்து கார சட்னியை செய்து பாருங்க
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை முக்கிய மூலப்பொருளாக கொண்டு உணவு தயார் செய்யப்படுவது மிகவும் குறைவு.
ஆனால் வெங்காயத்தை அதிகளில் உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தல் வளர்ச்சி முதல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது.
வெங்காயத்தை வைத்து கிராமத்து பாணியில் அட்டகாசமாக சுவையில் ஆரோக்கியம் நிறைந்த வெங்காய சட்னியை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தே.கரண்டி
பூண்டு - 5- பல்
சின்ன வெங்காயம் - 20
வரமிளகாய் - 4
புளி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தணணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் போட்டு நன்றாக வதக்கி இறக்கி, சிறிது நேரம் குளிரவிட வேண்டும்.
பின்னல் வதக்கிய பொருட்களை அம்மிக் கல்லில் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பக்குவமான பதத்தில் அரைத்து எடுத்து, ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
கடைசியில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் ஆரேக்கியம் நிறைந்த கிரமத்து முறையில் செய்யப்பட்ட வெங்காய சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |