Ganesh Chaturthi Special: இந்த வித்தியாசமான கொழுக்கட்டையை செய்து பாருங்க
இந்துக்களை பொருத்தவரையில் விநாயகர் சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்கப்படுகின்றது. இந்த நாளில் வீட்டில் தங்கள் கைகளால் பிரசாதம் செய்து விநாயகரை வழிப்படுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த நல்ல நாளில் அனைவரும் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை விதவிதமாக செய்து படைத்து வழிப்படுவது வழக்கம். கொழுக்கட்டையில் பல வகைகள் காணப்படுகின்றது.
இந்த வகையில் இந்த விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் வித்தியாசமான முறையில் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?
அப்போ பாசுமதி அரிசியைப் பயன்படுத்தி வித்தியாசமான தோற்றத்தில் ஒரு கொழுக்கட்டை செய்து உங்க வீட்டு பூஜைக்கு வருவோருக்கு கொடுத்து அசத்துங்க. இந்த வித்தியாசமான கொழுக்கட்டையை எப்படி எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - 2 சிட்டிகை
துருவிய தேங்காய் - 1/2 கப்
நெய் - 1 தே.கரண்டி
பாசுமதி அரிசி - 3 மேசைக்கரண்டி (3 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மாவை போட்டு ஈரப்பதம் போகும் வரையில் நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாசுமதி அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்த்து குறைந்தது 3 மணிநேரம் வரையில் ஊற வைத்து அதனையும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் உப்பு, துருவிய தேங்காய் மற்றும் நெய் சேர்த்து, வெல்லத்தை நன்றாக கரையும் வரையில் கரைண்டியால் கரைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
வெல்லம் நன்றாக கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, பின் வறுத்த பச்சரிசி மாவையும் அதனுடன் சேர்த்து கட்டிகள் இன்றி நன்றாக கிளறிவிட வேண்டும். மாவு நன்றாக திரண்டு வரும் நிலையில் அடுப்பை அனைத்துவிட்டு, ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கையால் பிசைய கூடிய அளவுக்கு மாவு ஆறியதும், கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். பின் சிறிது மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, பின் அதை ஊற வைத்த பாசுமதி அரிசியில் போட்டு பிரட்டி ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அனைத்து மாவையும் அது போல் உருண்டையாக செய்து இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய் தடவி, பின் ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு உருண்டையை வைத்து, மூடி வைத்து, 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் அருமையான சுவையில் பாசுமதி அரிசி கொழுக்கட்டை தயார்.
Karuppu Ulunthu Chutney: அசத்தல் சுவையில் சட்னி வேண்டுமா? கருப்பு உளுந்து கார சட்னியை செய்து பாருங்க
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |