sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு...
பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
[LDDY0LR ]
அந்தவகையில் அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும் மட்டனை கிராமத்து பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - ½ கிலோ
தனியா - 4 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 3/4 தே.கரண்டி
மிளகு - 3/4 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் 5-6
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 15
இஞ்சி - 2 துண்டுகள்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ½ தே.கரண்டி
தக்காளி - 1
கறிவேப்பிலை -10
சோம்பு -½ தே.கரண்டி
பச்சை மிளகாய் - 1
செய்முறை
முதலில் குழம்புக்கு தேவையான மசாலாவ அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மியில் அரைத்தால் சுலை அசத்தலாக இருக்கும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரையில் வறுத்து எடுத்து குளிரவிட வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் கொஞ்சமா எண்ணெய் சேர்த்துட்டு சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையான பதத்துக்கு வரும் வரையில் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வதக்குன இந்த ரெண்டு மசாலாவையும் ஆறவிட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொஞ்சமா எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, கழுவி சுத்தம் செய்து வைத்த மட்டனையும் போட்டு மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மட்டன் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கொஞ்சம் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேகவிட வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததுதும் இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுலையில் மட்டன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |