மட்டன் குழம்பு கிராமத்து பாணியில் இப்படி செஞ்சுபாருங்க... சுவையை மறக்கவே மாட்டீங்க

Healthy Food Recipes
By Vinoja Oct 27, 2024 12:40 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிடுவதில் அலாதி இன்பம் இருக்கும். சமையல் என்பது மனிதவர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது. 

குறிப்பாக அசைவ உணவுகள் என்றால் சொல்லும் போதே பெரும்பாலானவர்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிடும். 

மட்டன் குழம்பு கிராமத்து பாணியில் இப்படி செஞ்சுபாருங்க... சுவையை மறக்கவே மாட்டீங்க | Village Style Mutton Curry Recipe In Tamil

அப்படி அசைவ உணவுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மட்டன் குழம்பை கிராமத்து பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது?

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

மட்டன் - 1 கிலோ

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

பிரியாணி இலை - 1 

கல்பாசி - சிறிது 

பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து 

பச்சை மிளகாய் - 1 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் 1/4 தே.கரண்டி 

காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி

தக்காளி - 2 (நறுக்கியது) 

உப்பு - சுவைக்கேற்ப 

கறி மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி

குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி 

சுடுநீர் - தேவையான அளவு 

கரம் மசாலா - 1 தே.கரண்டி 

கொத்தமல்லி - சிறிதளவு 

புதினா - சிறிதளவு 

மட்டன் குழம்பு கிராமத்து பாணியில் இப்படி செஞ்சுபாருங்க... சுவையை மறக்கவே மாட்டீங்க | Village Style Mutton Curry Recipe In Tamil

அரைப்பதற்கு தேவையானவை

துருவிய தேங்காய் - 1/2 கப் 

முந்திரி - 5

கசகசா - 1 தே.கரண்டி 

சின்ன வெங்காயம் - 3

செய்முறை

முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

மட்டன் குழம்பு கிராமத்து பாணியில் இப்படி செஞ்சுபாருங்க... சுவையை மறக்கவே மாட்டீங்க | Village Style Mutton Curry Recipe In Tamil

பின்னர் அதனுடன்  பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு பச்சை மிளகாயை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர்  மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

மட்டன் குழம்பு கிராமத்து பாணியில் இப்படி செஞ்சுபாருங்க... சுவையை மறக்கவே மாட்டீங்க | Village Style Mutton Curry Recipe In Tamil

அதனையடுத்து  மட்டனை சேர்த்து நன்றாக கிளறி, மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் வரையில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் கிரேவிக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4-5 விசில் வரும் வரையில் வேகவிட வேண்டும்.

விசில் வருவதற்குள் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், முந்திரி, கசகசா, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

மட்டன் குழம்பு கிராமத்து பாணியில் இப்படி செஞ்சுபாருங்க... சுவையை மறக்கவே மாட்டீங்க | Village Style Mutton Curry Recipe In Tamil

விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து, குழப்பு கெட்டியாகும் வரையில் கொதிக்க விட்டு,  சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கலந்து குக்கரை மூடி, மீண்டும் 2 விசில் விட்டு இறக்கினால், அசத்தல் சுவையில் மட்டன் குழம்பு தயார். 

ரெஸ்டூரண்ட் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி வேண்டுமா? இந்த பொருட்களை சேர்த்தால் போதும்

ரெஸ்டூரண்ட் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி வேண்டுமா? இந்த பொருட்களை சேர்த்தால் போதும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US