கொதிக்கும் மஞ்சள் நீரை உடல் மீது ஊற்றிக் கொண்டு ஆக்ரோஷமாக சாமியாடி அருள்வாக்கு கூறிய இளம் பெண்! பதறிப் போன பக்தர்கள்
கொதிக்க கொதிக்க மஞ்சள் நீரை உடல் மீது ஊற்றிக் கொண்டு அருள்வாக்கு கூறிய இளம்பெண் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒரத்தநாடு அருகே சில்லத்தூா் கிராமத்தில் இந்த அதிசய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில்லத்தூா் கிராமத்தில் நாககன்னி அம்மன் , சுடலை மாடன் கோயிலில் ஆவணி அமாவாசை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் 21 வயது ஆகும் நாகவள்ளி என்ற பெண் மற்றும் பூசாரிகள் ரமேஷ், திருநாவுக்கரசு ஆகியோா் ஆக்ரோஷமாக சாமியாடி, திருமண விழாவில் சமையல் செய்யும் மிகப் பெரிய அண்டாவில் மஞ்சள் தூள் கலந்த சுடு தண்ணீரை வேப்பிலை மூலம் தங்களது உடலில் ஊற்றிக் கொண்டு பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினா்.
இளம்பெண் ஒருவா் உடலில் சுடு தண்ணீரை ஊற்றிக் கொண்டு பக்தா்களுக்கு அருள்வாக்கு சொல்வதை கிராம மக்கள் புதுமையாக பாா்த்தனா்.