வாழ்வில் முதன்முறையாக மின்சார பல்ப்பை பார்த்த மக்கள்! கிராமத்தின் 75 வருஷ காத்திருப்பு..
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் 75 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருளில் இருந்த மக்களுக்கு தற்போது மின்சாரம் கிடைத்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
75 ஆண்டு மின்சாரம் இல்லாமல் தவிப்பு
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள துரு பிளாக்கில் டெத்தன் என்னும் கிராமத்தில் மின்சார வசதியே இல்லாமல் மக்கள் 75 வருடமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தற்போது கோரிக்கை நிறைவேறியுள்ளது. இந்த கிராமத்தில் 200 பேர் வாழ்ந்து வரும் நிலையில், தொலைதூர கிராமத்தில் மத்திய அரசு வழங்கும் பிரதமர் மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிராம மக்கள் கூறுவது என்ன?
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், இன்று முதல் முறையாக மின்சாரத்தினை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், தங்களது குழுந்தைகள் இனி வெளிச்சத்தில் படிப்பதுடன், அதிக பிரச்சினையை சந்தித்த நாங்கள் இனி பிரச்சினை இல்லாமல் இருப்பதுடன், இத்தருணத்தில் மின்சாரம் வழங்கிய அரசுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
தற்போது 60 வீடுகளுக்கு மின்சார வசதி தற்போது கிடைத்துள்ளது அந்த கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.