வயதானவர்கள் மட்டும் வசிக்கும் ஓர் அதிசய கிராமம்...இங்கு இளைஞர்களே இல்லை தெரியுமா?
உலகில் உள்ள விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளவோ அல்லது அதை பற்றி தேடி எடுக்கவோ போனால் அதில் நிறைய அதிசய விஷயங்கள் காணப்படும்.
இன்று வயதானவர்கள் மாத்திரம் வாழ்ந்து வரும் ஒரு கிராமத்தை பற்றி ஆராயலாம்.
இவை ஒவ்வொன்றும் கேட்கும் போது எமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இப்படி ஒரு கிராமத்தை தான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.
பிரிட்டன்
பிரிட்டனில் வயதானவர்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கென்று ஒரு கிராமத்தை அமைத்து அதில் நிம்மதிக வாழ்கின்றனர். பிரிட்டனில் கேனாக் மில் என்ற கிராமம் உள்ளது.
கட்டிடக் கலைஞர் ஆன் தோர்ன் என்பவர் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து 2.5 ஏக்கர் பரப்பளவில் இந்த சுற்றுச்சூழல் கிராமத்தை வடிவமைத்துள்ளார்.
இவர் தான் லண்டனில் தனியாக வாழ்ந்ததால் அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரை போல மற்றவர்களும் அந்த சுகத்தை பெற வேண்டும் என்பதற்காக இந்த இடத்தை உருவாக்கியுள்ளார்.
இங்கு வயதானவர்களை தவிர வேறு யாரும் இல்லை. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து உணவு சமைப்பார்கள்.
எல்லோரும் ஒன்றாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் ஒருவருக்கொருவர் எந்த பணமும் வாங்காமல் வாழ்கின்றனர்.
வாரத்தில் நான்கு நாட்கள் முழு கிராமமும் ஒன்றாக பங்கேற்று பேசி, உண்டு மகிழ்கிறார்கள். இப்படி எதை செய்தாலும் ஒன்றாக செய்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |