பதுமைப்போல் இருந்து திடீரென வெடிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்: மரண கலாய் வாங்கிய ஜனனி!
இன்றைய நாள் தீபாவளி தினத்தையோட்டி பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடைய கேள்வி - பதில் டாஸ்க் தொடர்பில் ப்ரொமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.
பண்டிகை
இன்று உலாகளாவிய ரீதியில் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிலும் 19 போட்டியாளர்களுடன் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் பிக் பாஸில் கடந்த சில வாரங்களாக கடும் சண்டை மற்றும் வாக்குவாதம் இடம்பெற்று வந்தது. இதன்படி இந்த வாரம் நோமினேஷனாகும் போட்டியாளர்கள் தொடர்பிலும் சில தகவல் வெளியாகியுள்ளது.
கேள்வி- பதில்
உருவத்தில் சின்னவர்களாக இருந்தாலும் பெரிசா வெடிப்பது யார் என மைனா நந்தனி கேள்வியெழுப்பியதற்கு, ஜனனி என விக்ரமன் பதிலளித்துள்ளார்.
இந்த பதில் போட்டியாளர்களிடையே ஏற்றுக் கொள்வதுப் போன்ற ப்ரொமோ தற்போது வெளிவந்துள்ளது.