கம்பீரமாக வந்த விக்ரமனை கதிகலங்க வைத்த விருந்தினர்! வேற லெவல் காணொளி
பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்த குயின்ஷி கம்பீரமாக வந்த விக்ரமனை கதிகலங்க வைத்த காட்சி ட்ரெண்டங்காகி வருகின்றது.
கதிகலங்கிய விக்ரமன்
பிரபல ரிவியில் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
கடந்த வாரம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் வெளியேறும் நபர், ஷிவின் அல்லது மைனா நந்தினியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த 6 போட்டியாளர்களின் அமுதவானன் முதல் ஃபைனலிஸ்டாக சென்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸிற்குள் வந்துள்ளனர்.
பொதுவாக வீட்டிற்கு விருந்தினர் வரும் போது பாட்டு ஒலிக்கும். ஆனால் இங்கு குயின்ஸி மிகவும் சைலண்டாக வந்துள்ளார். குயின்ஸியின் வேண்டுகோளை ஏற்று பிக்பாஸ் செய்த செயலால் விக்ரமன் கதிகலங்கி போயுள்ளார்.
பேட்டரி மாற்றும் அறைக்கு எதார்த்தமாக சென்ற விக்ரமன் உள்ளே குயின்ஸி இருப்பதைக் கண்டு கடும் ஷாக் அடைந்துள்ளார்.
அதன் பிறகு வெளியே வந்த குயின்சியிடம் "ஏம்மா இப்படி பண்ற?" என சிரித்தபடியே கைகுலுக்குகிறார். அப்போது பிக்பாஸ்,"குயின்சி வெல்கம் பேக்" என்கிறார். அதற்கு குயின்சி புன்னகைத்தபடி நன்றி கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
Queency re-enters the house and Vikraman gets scared again.#BiggBossTamil6 pic.twitter.com/UBb5RKQmHq
— Bigg Boss Follower (@BBFollower7) January 12, 2023