திரை தீப்பிடிக்கும்.. என சூர்யா வரும் காட்சியில் நிஜமாகவே பற்றி எரிந்த திரை - அலறியடித்த ஓடிய ரசிகர்கள்
உலக நாயகன் கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ம் தேதி உலகமெங்கும் வெளியான படம் தான் விக்ரம்.
இப்படம் வெளியான நாளில் இருந்தே வசூல் ரீதியாக செம்ம போடு போட்டு கொண்டிருக்கிறது.
இதுவரை 180 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. படத்தின் வெற்றியை படக்குழுவினர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் கமலும் படக்குழுவினர்களுக்கு அன்பு பரிசாக லோகேஷ் கனகராஜுற்கு காரையும், மற்றும் உதவி இயக்குனர்களுக்கு பைக்கையும் வாங்கி கொடுத்திருந்தார்.
தற்போது நடிகர் சூர்யாவிற்கு அன்பு பரிசாக அவரின் Rolex வாட்சையும் பரிசாக கொடுத்தார் இந்த புகைப்படமும் பரவி வருகின்றன.

பற்றிய தீ
இந்நிலையில், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நேற்று மாலை படம் முடியும் நேரத்தில் திரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைக்கண்ட ரசிகர்கள் அலறியப்படி வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.
மேலும், படத்தின் கடைசி காட்சியில் சூர்யா வரும் போது அவரைக்கொண்டாட ரசிகர்கள் கற்பூரம் ஏற்றி தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Lyric suit aagudhu @Suriya_offl Entry La ??#Rolex Entry sorry #RolexSir
— Guna Balan (@thinindhavan) June 8, 2022
Pondicherry Theatre pic.twitter.com/i2WuCz16b7