திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? வெளியான பரபரப்பு விளக்கம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்ரமின் சிகிச்சை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் மிகவும் அருமையாக நடித்து பிரமிக்க வைப்பவர் நடிகர் விக்ரம்.
இவர் தற்போது மனிரத்தனம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகால சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருந்த நிலையில், திடீரென விக்ரமுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஆனால், இந்த செய்தியை சில தவறாக புரிந்துகொண்ட விக்ரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல்கள் பரப்பினர்.
இந்நிலையில் விக்ரம் தரப்பிலிருந்து வெளியான விளக்கத்தில், இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த விக்ரம் நேற்று அசௌகரியாக உணர்ந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டனர், தற்போது பூரண குணமடைந்து வருகிறார். பெரும்பாலும் நாளை வீடு திரும்பிவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
