மகனுடன் மயிரிழையில் உயிர்தப்பிய நடிகர் விக்ரம்: நடந்தது என்ன?
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் வெளிநாட்டிற்கு சென்ற வழியில் விமானம் பழுதானதால் பத்திரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளனர்.
விக்ரம் 60 படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் இணைந்து நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அரசின் அனுமதியுடன் வெளியிடங்களுக்கு சென்று எடுக்கவிருக்கும் காட்சியினை படக்குழுவினர் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன் படி டார்ஜிலிங் செல்ல தயாரான படக்குழுவினர் விக்ரம், துருவ் உட்பட 60 பேர் விமானத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் பழுது ஏற்பட்டதால் நடுவானில் தத்தளித்த அவர்கள் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் 45 நிமிடத்தில் தரையிறக்கப்பட்டனர்.
பின்பு மறுநாள் படப்பிடிப்பிற்காக டார்ஜிலிங் சென்றுள்ளனர் படக்குழுவினர். இதில் துருவுக்கு ஜோடியாக வாணி போஜனும், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை சிம்ரனும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.