ஆஸ்கர் விருதோடு வந்த தயாரிப்பாளர் குனீத் - உற்சாக வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்
ஆஸ்கர் விருதோடு வந்த தயாரிப்பாளர் குனீத்திற்கு குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உற்சாக வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சமீபத்தில் மார்ச் 13ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற ஆவணக் குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்று சரித்திர புகழ் படைத்தார்.
இந்நிலையில், ஆஸ்கர் விருதை பெற்று திரும்பிய அவருக்கு உறவினர்களும், நண்பர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஆஸ்கர் விருதை குனீத்தின் தாயார் கையில் ஏந்தி பெருமகிழ்ச்சியோடு சென்றார்.
இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்களும், நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH: @TheVikasKhanna shares a video welcoming @guneetm after she brings home the Oscar for #TheElephantWhisperers #VikasKhanna #Oscars #GuneetMonga #Oscars2023 pic.twitter.com/3n0QiesC5W
— HT City (@htcity) March 19, 2023