முதல் முறையாக TRP-யில் சன் டிவியை எகிறி அடித்த விஜய் டிவி.. கோடிக்கணக்கில் கெத்து காட்டும் குக் வித் கோமாளி
கொரோனா லாக்டவுனில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஓடிடி படங்கள், வெப் சீரியஸ் என அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இதனையடுத்து, எப்பொழுது டிஆர்பி-யில் டாப்பில் இருக்கும் சன் டிவி தற்போது தரமான நிகழ்ச்சிகளை கொடுப்பதிலிருந்து விலகி உள்ளது.
அதற்கு காரணம் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பிரபலமானவர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது தான். ஆனால், மற்ற டிவி சேனல்கள் ரியாலிட்டி ஷோ மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. குறிப்பாக, விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு ராஜாதான். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஆனால் சன் டிவி ரியாலிட்டி ஷோ செய்தே நீண்ட நாட்களாகிவிட்டது. இந்த நிலையில், எப்போதுமே முதல் இடத்தில் இருக்கும் சன் டிவி தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது சன் டிவி நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். அதற்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு குடும்பம் குடும்பமாக கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பும் போது மட்டும் விஜய் டிவியின் TRP வேற லெவலில் கெத்து காட்டி வருகிறது. அதேபோல் பாரதிகண்ணம்மா சீரியலும் TRP-யில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதன் காரணமாக, தற்போது சன் டிவி முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கண்டிப்பாக அடுத்த வாரம் ஏதாவது ஒரு புதிய படத்தை போட்டு இழந்த தங்களுடைய டிஆர்பியை மீட்க சன் டிவி நிறுவனம் போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.