விஜயகுமார் மகளுக்கு தாய்மாமன் சீர் செய்தது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜயகுமார் மகள் அனிதாவின் திருமண நிகழ்வில் சடங்குகளை செய்துள்ளார் சத்யராஜ்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஜயகுமார், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே முத்துக்கண்ணு என்பரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கவிதா, அனிதா என்ற இரு மகள்களும், அருண்விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
பின்னர் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார். இதில் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என 3 மகளகள் உள்ளனர்.
இதில் மருத்துவரான அனிதாவுக்கு திருமணம் நடந்த பொது, தாய்மாமன் முறையில் சடங்குகளை செய்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
இது தொடர்பான புகைப்படங்களை ஷேர் செய்துள்ள அனிதா, திருமண சடங்கின்போது எனது மாமாவை காணவில்லை. அதனால் சத்யராஜ் அண்ணாதான் தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து அத்தனை சடஙகுகளையும் எனக்காக செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.