பட்டு வேஷ்டி, கூலிங் கிளாஸில் கலக்கும் விஜயகாந்த்! மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்
நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 33வது திருமண ஆண்டினைக் கொண்டாடியுள்ளார்.
விஜயகாந்த்
கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசாரத்தில் ஈடுபட வைத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார்.
பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமண நாள் கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 33வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது திருமண நாளை தொண்டர்கள், ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடியுதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பட்டு வேஷ்டி சட்டை மற்றும், கறுப்பு கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்தவாறு மனைவியின் கழுத்தில் மாலையும் மாற்றியுள்ளார் விஜயகாந்த். இருவரும் தஙை்களது மகன்களுடன் கழுத்தில் மாலையணிந்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் விஜய்யின் தந்தை நேரில் சென்று கன்னத்தில் முத்தமிட்டு இவருக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.