மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டில் மற்றுமொரு சோகம்.. கலங்கி நிற்கும் குடும்பத்தினர்
மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டில் சோகம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் மறைந்த நடிகர் விஜயகாந்த்.
இவர், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுசபுரம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தார்.
சிறு வயதிலேயே தாயார் இறந்து விட்டதால் விஜய்காந்த் குடும்பத்துடன் மதுரைக்கு வந்துவிட்டார்.
நடிகர் விஜயகாந்துடன் ஆறு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் பிறந்துள்ளார்கள். மொத்தமாக 11 பேருக்கு மூத்த அண்ணனாக நாகராஜ் இருந்துள்ளார். அவருக்கு அடுத்து பிறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த்.
சினிமாவிலும் அரசியலிலும் கொடிக்கட்டி பறந்த விஜயகாந்த் உடல்நலம் குறைவால் உயிரிழந்து விட்டார். அவர் சென்றாலும் அவருடைய புகழ் இன்றும் அழியாமல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக உள்ளது.
சோகத்தில் குடும்பத்தினர்
இந்த நிலையில், விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரி சென்னையில் வசித்து வரும் நிலையில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார்.
அவருடைய இறுதிச்சடங்குகள் நாளை மாலை ஒரு மணி முதல் மூன்று மணி வரை, அண்ணாநகர் வடக்கு குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த அரசியல் தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
