விஜயகாந்த் நடித்த இறுதி படம் பாதியில் நிறுத்தப்பட்ட சோகம்... வைரலாகும் ஷூட்டிங் காட்சி
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரின் பிரிவால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலபங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்லாயிர கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் நடித்த இறுதி படம்
இந்நிலையில் அவரின் பழைய வீடியோக்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சினிமாவில் சிறந்த நடிகராகவும், அரசியலில் நல்ல தலைவராகவும், மக்களுக்கு நல்ல மனிதனாகவும் வாழ்ந்து மறைந்தவர் விஜயகாந்த்.
இதுவரை சினிமாவில் அவர் மொத்தம் 180 படங்கள் நடித்துள்ளார். தமிழை தாண்டி எந்த மொழியிலும் நடிக்ககூடாது என விடாப்பிடியாய் இருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த்.
அயராமல் உழைத்த அவர் நோய்வாய்ப்ட்டதன் பின்னர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து குணமாகி வர 5 வருடங்கள் கழிந்தன.
பிறகு தமிழன் என்று சொல் படத்தில் நடித்தார். தன் மகன் சண்முகபாண்டியனுடன் நடித்த இந்த படத்தை இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கினார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்தார்.
‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்த் இரண்டாவது முறையாக மகன் சண்முக பாண்டியனுடன் இந்த படத்தில் தான் நடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக படம் பாதியில் கைவிடப்பட்டது.
குறித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஷூட்டிங் காட்சியொன்று தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட தமிழன் என்று சொல் படப்பிடிப்பு தளம் pic.twitter.com/G5KkXHkZSS
— Rajini (@rajini198080) December 28, 2023
வாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |