சமத்துவத்தை நிலைநாட்டிய மக்கள் தலைவன்.. அவரே கூறிய சில வார்த்தைகள்- வீடியோ
சமத்துவத்தை எப்படி விஜயகாந்த் நிலைநாட்டினார் என்பதனை அவரே பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜயகாந்த்
“ கேப்டன் ” என சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் அன்பாக அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.
இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காலமானார்.
இதனை தொடர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவர் வீட்டு முன்னாள் வந்து படுத்திருந்து அஞ்சலி செலுத்து அளவிற்கு பிரபலமானவராக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த்.
சமத்துவத்தை நிலைநாட்டிய தருணம்
இந்த நிலையில், மக்களுக்கும் தலைவர்களுக்கும் இருக்கு வேறுபாட்டை நகர்த்தெறிந்து எப்படி சமத்துவத்தை நிலைநாட்டினார் என்பதனை விஜயகாந்த் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது, “ ஆரம்ப காலத்தில் நடிக்கும் சமயங்களில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஹீரோயின்கள் சாப்பிட்டு முடித்து விட்டால் உடனே ஷாட் ரெடி என்று கூறி விஜயகாந்தை உடனே அழைத்து விடுவார்கள்.
நானும், சாப்பாட்டை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விடுவேன். இந்த எண்ணங்கள் மனதிற்கு நெருடலை தந்ததால் தான் நல்ல நிலைக்கு வந்த பின்னர் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுக்க வேண்டும்.
மேலும் நான் என்ன சாப்பிடறனோ அது தான் எல்லாரும் சாப்பிடணும் என கூறினேன்..” என பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காணொளியை பார்த்த ரசிகர்கள் “ தலைவன் என்றால் இவர் தான்..” என நேர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
When #Vijayakanth democratised food in the film industry ❤️ pic.twitter.com/p6UGgn7nH7
— Rajasekar (@sekartweets) December 28, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |