கலங்கி நின்ற தனுஷின் சகோதரி.. ஓடி வந்து உதவிய விஜயகாந்த்! பலரும் அறியாத உண்மை
நடிகர் தனுஷின் தங்கையின் படிப்புக்கு விஜயகாந்த் உதவி செய்த நிலையில், அவர் தன்னுடைய இரங்கலையும், அவர் செய்த உதவியையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் குடும்பம்
பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா, தன்னுடைய மகன்கள் சினிமா துறையில் தலை தூக்கிய பின்பு நல்ல நிலையில் இருந்தாலும், ஆரம்ப காலத்தில் அதிக கஷ்டங்களை சந்தித்துள்ளார்.
தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களையும் நன்கு படிக்க வைத்துள்ளார். இவருடைய மகன்களான செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார்.
அதை போல் தனுஷ் முன்னணி நடிகராக மட்டும் இன்றி பன்முக கலைஞராக விளங்கி வருகிறார். கஸ்தூரி ராஜா தன்னுடைய மகள்களையும் நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தனுஷின் தங்கையில் ஒருவரான கார்த்திகா 12ம் வகுப்பில் சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்துள்ளார். இதனால் அவரது மருத்துவ கனவிற்கு இடம் இல்லாமல் போன நிலையில், மகளை தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்கும் வசதி இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் நிலைகுலைந்து நின்ற நிலையில், விஜயகாந்த் எதேர்சையாக கஸ்தூரிராஜா வீட்டுக்கு வர சொல்லி சந்தித்து பேசி உள்ளார்.
அத்தருணத்தில் உடனே விஜயகாந்த் கார்த்திகாவிற்கு ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்துள்ளார். அதற்கான ஆகிய செல்வுகள் அனைத்தையும் அவரே ஏற்றுள்ளார்.
இரங்கல் தெரிவித்த மகள்
இந்நிலையில் விஜயகாந்த் மறைவை ஒட்டி, அவருக்கு இரங்கல் தெரிவித்து கார்த்திகா தேவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "சிலர் மட்டுமே கடவுளுக்கு இணையாக உதவுவார்கள்... எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி!! அப்படிப்பட்ட மனித நேயம் கொண்ட ரத்தினம் நீங்கள். எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. நீங்கள் பல பள்ளி குழந்தைகளின் கல்வி கனவை நிறைவேற்றி வைத்துள்ளீர்கள்.
அப்படி நீங்கள் உதவி செய்ததில் நானும் ஒருவர். இதை எப்படி உங்களுக்கு நான் திருப்பி செலுத்துவேன். என்னுடைய எம்பிபிஎஸ் கனவு உங்களால் நிறைவேற்றப்பட்டது.
உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நான் உங்களின் தீவிர ரசிகை. இப்பொது நாங்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறோம். நீங்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |