கையில் குழந்தையுடன் இருக்கும் விஜய் - யாருடைய குழந்தை தெரியுமா? ட்விட்டரை தெறிக்கவிடும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நடனமாடி வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த பாடல் வெளியானதில் இருந்து, அசால்ட்டாக 50 மில்லியனை கடந்து யூடியூபை கதறவிட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது குழந்தை ஒன்றை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
இந்த குழந்தை விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
அந்த இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்தின் மகளுக்கு சமீபத்தில் பிறந்த குழந்தையை தூக்கி விளையாடியுள்ளார்.
விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். பீஸ்ட் லுக்கிலேயே விஜய் உள்ளார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.