நடிகர் விஜய் அணிந்து வந்த பச்சை நிற சட்டை யார் வாங்கிக் கொடுத்தது? ட்ரெண்டான விஷயம்
நடிகர் விஜய் சமீபத்தில் மக்கள் நிர்வாகியை சந்தித்த போது அவர் அணிந்து வந்த பச்சை நிற சட்டை தற்போது பேச்சு பொருளாக இருந்து வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம்வரும் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
ஏனெனில் நாளுக்கு நாள் அவர் செய்யும் செயல்களில் அதிக மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களை தொகுதி வாரியாக வரவழைத்து பரிசும், ஊக்கத்தொகையும் கொடுத்த மக்கள் மத்தியில் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளார்.
தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பினை முடித்த விஜய், சமீபத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து நேரில் சந்தித்தார். அப்போது அணிந்து வந்த சட்டை தற்போது பேச்சு பொருளாக இருந்து வருகின்றது.
யார் கொடுத்த சட்டை?
விஜய் தனது அப்பா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது தாய் அவ்வப்போது விஜய்யுடன் பேசிக் கொள்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் அணிந்து வந்த சட்டை அவரது தாய் ஷோபா பரிசளித்தது என்பது தெரியவந்துள்ளது. விஜய்யின் அம்மா ஷோபா ஒரு கடையில் விஜய்க்கு பச்சை நிற சட்டை ஒன்றை வாங்கியிருந்தார்.
இதனை விஜய்க்கு கொடுக்கபோவதாக பேட்டியில் கூறியிருந்ததை நினைவில் வைத்திருந்த ரசிகர்கள், தற்போது இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |