நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா சீரியல் நடிகையா? இணையத்தில் வைரல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவர் என்ன செய்தாலும் அதை இணையத்தில் வைரலாக்குவது ரசிகர்களின் ஆர்பரிப்பு செயல்.. அந்த வகையில், சில நாட்களாகவே சமூக வலைதள பக்கங்களில் பலரும் பகிர்ந்து வரும் புகைப்படமாக இருந்து வந்தது.
அதில், விஜய் ஒரு பெண் குழந்தையை கையில் தூக்கி வைத்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சீரியல் நடிகை என்பது தற்போது தெரிய வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஆம், கலர்ஸ் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடரான இதயத்தை திருடாதே. இந்த சீரியலில் சஹானா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹிமா பிந்து.
இவருக்கு ஜோடியாக நவீன் குமார் என்பவர் இந்ததொடரில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து இருக்கும் குழந்தை ஹிமா பிந்து என்பது தற்போது தெரிய வந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், சிறுவயதிலேயே விஜய்யுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை ஹிமா பிந்து, விஜய்யின் பிறந்த நாளின்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது தான் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.