புறாவை பறக்கவிட்டதும் குற்றமா? விஜய்க்கு எதிராக கிளம்பிய புதிய பிரச்சனை!
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழக தேர்தல் பிரசாரத்தின் போது புறாக்களை பறக்கவிட்டமைக்காக விஜய்க்க கண்டனம் தெரிவித்து PETA அமைப்பு கடிதம அனுப்பியுள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக சிக்கலை ஏற்படுத்திய PETA அமைப்பு தான் தற்போது விஜய்க்கு எதிராகவும் கன்டனம் தெரிவித்துள்ளது.

அரசியலில் கால்பதித்த நாள் தொடக்கம் விஜய்க்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், புறாவை பறக்கவிட்டது தொடர்பாக 'பீட்டா இந்தியா'' எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''தேர்தல் பிரசாரத்தின்போது புறாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த புறாக்களின் உடலில் தவெக கொடியின் வண்ணம் பூசப்பட்டுள்ளது. அரசியலுக்கு பறவைகள், விலங்குகளை பயன்படுத்த வேண்டாம். விலங்குகள், பறவைகள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல'' என கூறப்பட்டுள்ளது. அதனால் விஜய்க்கு எதிராக புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.