Neeya Naana: சொந்தங்களை தொலைத்த புலம்பெயர் தமிழர்களின் அவலம்- கதை கேட்டு பிரமித்து போன கோபிநாத்
“பல நூற்றாண்டுகளாக சொந்தங்களை தேடி கொண்டிருக்கிறோம்..” என நீயா நானா அரங்கில் பெண்ணொருவர் அழுத காட்சி இணையவாசிகளை கவலையடைய வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயா நானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
இந்த நிலையில் இந்த வாரம் சொந்தங்கள் யார் என்று தெரியாமல் வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகள், அவர்களை இன்றும் மறவாமல் இருக்கும் தமிழர்கள் என இரண்டு அணியினர் வாதிடவுள்ளனர்.
சொந்தங்களை தொலைத்தவர்களின் அவலம்
அதில் பெண்ணொருவர், “ என் தந்தையிடம் நான் கேட்டிருக்கிறேன். ஏன் நமக்கு மாத்திரம் சொந்தங்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் எங்கிருக்கிறார் என்பதனை தேடி சென்ற போது , அவர்களை பார்த்தவுடன் கட்டியணைத்து கொண்டேன்..” என கண்ணீருடன் கூறியுள்ளார்.
அதன் பின்னர் தமிழ் ஆர்வலர் ஒருவர், “ பல வருடங்களுக்கு முன்னர் இந்திய தமிழர்களை அடிமைகளாக பல நாடுகளுக்கு வேலைக்கு கொண்டு சென்றனர். அந்த பயணம் சரியாக 1.5 வருடங்களுக்கு இருக்கும். இடையில் ஏதாவது நோய் ஏற்படின் அவர்களை தூக்கி கடலில் வீசி விடுவார்கள்..” என கூறியுள்ளார்.
மேலும் கடும் உழைப்பாளிகளான தமிழர்கள் கறும்பு தோட்டங்கள் மற்றும் இறப்பர் தோட்டங்கள் போன்ற வேலைகளுக்காகவே நாடுக்கடத்தப்பட்டுள்ளனர். இன்றும் பல நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..” என அங்கு வந்திருந்தவர்களின் கருத்துக்களில் வெளிப்பட்டது.
இந்த எபிசோட் பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இது போன்ற பிள்ளைகள் எமது சமூகத்திலும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாகவும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |