விஜய் டிவி சிவாங்கிக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்
திருமணம் குறித்த கேள்விக்கு குக் வித் கோமாளி ஷிவாங்கி இன்ஸ்டாகிராம் லைவில் பதிலளித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒருவர், நீங்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வீர்கள் எனக் கேட்டார், அதற்கு "எட்டு வருடங்களுக்குப் பிறகு" என உடனடியாக பதில் கூறினார் ஷிவாங்கி. இதனை கேட்டு ரசிகர் ஷாக்காகியுள்ளார்.
இன்னொருவர் உண்மையான காதல் எது எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஷிவாங்கி, "என் கருத்துப்படி உண்மையான காதல் என்று ஒன்றில்லை. ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது தான் அது. நீங்கள் ஒருவரை நேசித்தால், அவர்கள் உங்களையும், உங்கள் அன்பையும் புரிந்து நடக்கவில்லை எனில், அந்த உறவில் நீடிப்பதில் பயனில்லை" என்றார்.
அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் மற்றும் அஸ்வினின் கடின உழைப்பு தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாகவும் குறிப்பிட்டார்.