விபத்தில் சிக்கி நுனியில் உயிர் தப்பிய சீரியல் நடிகை.. அவரே வெளியிட்ட நேரலை காட்சி!
விபத்தில் சிக்கி நுனியில் உயிர் தப்பியதாக சீரியல் நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை வைஷாலி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'முத்தழகு' என்ற சீரியல் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷாலி.
இவர் இந்த சீரியல் இரண்டாம் கதாநாயகி என்று கூட கூறலாம்.
இதனை தொடர்ந்து சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், “ஆனந்த ராகம் ” சீரியலிலும், அழகு சுந்தரத்தின் மாமன் மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியல்கள் மட்டுமல்ல திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சின்னத்திரையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
விரல் நுனியில் உயிர் தப்பிய நடிகை
அந்தவகையில், சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “ நா தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த போது... டிரைவர் பேரி கார்டு உள்ளதை கவனிக்காமல் திரும்பிவிட்டார். இதனால் கார் விபத்திற்குள்ளாகி விட்டது.
நான் சீல்பெல்ட் போட்டிருந்த காரணத்தினால் நுனியில் உயிர் தப்பினேன். நீங்களும் இனி வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணியுங்கள்..” என கூறியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இதனை பார்த்த வைஸாலினி ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |