Neeya naana: ஹனிமூனுக்கு துணைக்கு வந்த மாமியார்- மாமனார்! மாப்பிள்ளைகளின் புலம்பல்கள்
“என்னுடைய மாமியார்- மாமனார் எங்களுடைய ஹனிமூனுக்கு கூட மனைவிக்கு துணையாக வந்தார்கள்..” என புதிதாக திருமணம் செய்த மாப்பிள்ளையின் புலம்பல் நீயா நானா அரங்கத்தையே நகைக்க வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும்.
இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
புது மாப்பிள்ளையின் ஆதங்கம்
இந்த நிலையில் இந்த வாரம் தந்தையின் அன்பு மகளும், அவர்களை திருமணம் செய்த மாப்பிள்ளைகளும் இரு அணிகளாக பிரிந்து வாதங்களை ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் நிகழ்ச்சியில் செல்ல மகள்களாக வளர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு அவஸ்தைப்படும் இளைஞர்களின் புலம்பல்கள் இந்த வாரம் பேசப்படவுள்ளது.
அப்பாவின் செல்லமாக இருந்த காரணத்தினால், வீட்டில் இருந்து வெளியில் போகக் கூட சில பெண்கள் விரும்பாமல் இருக்கிறார்கள். அதே சமயம், ஒரு பெண் திருமணம் செய்த பின்னர் மாப்பிள்ளையுடன் ஹனிமூன் செல்வதற்கு கூட தன்னுடைய தந்தையும், தாயையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார்.
இது மாப்பிள்ளைக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இவர், இப்படி கூறியதை கேட்ட கோபிநாத் சிரிக்க ஆரம்பித்துள்ளார்.
வெற்றி வசந்தின் மனைவி எப்படியானவர்?
இதற்கிடையில், சிறப்பு விருந்தினராக வந்த வெற்றி வசந்த் பேசுகையில், “என்னுடைய மனைவி அவருடைய அப்பாவிற்கு மாத்திரம் அல்ல. ஒரு குடும்பத்திற்கே செல்ல பிள்ளையாக வளர்ந்திருக்கிறார். அவரை நான் ஏய் என கூறிய போது அழுக ஆரம்பித்து விட்டார். அதிலிருந்து பெரிதாக எதுவும் பேசுவதில்லை..” என பேசியிருக்கிறார்.
இப்படியாக ஒவ்வொரு தம்பதிகளும் தங்களுக்குள் நடக்கும் அலப்பறைகளையும், அவஸ்தைகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
கடந்த வாரங்களில் பேசப்பட்ட தெருநாய்கள் வளர்ப்பது பற்றிய வாதங்கள் இன்று வரையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளது. இது போன்று இந்த வாரம் வாதம் எப்படி இருக்கப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |