ஒரு வழியாக மணிமேகலையின் ஆசையை நிறைவேற்றிய கணவர்.. இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?
மணிமேகலையின் ஆசை ஒரு வழியாக நிறைவேறி விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளியுடன் நெகிழ்ச்சியை பதிவை வெளியிட்டுள்ளார்.
மணிமேகலையின் வாழ்க்கை
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் தொகுப்பாளர் மணிமேகலை.
இதனை தொடர்ந்து தற்போது கலைக்கட்டிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அனைவரின் முன்னும் பரீட்சையமாகிவிட்டார்.
இன்று மணிமேகலையை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அத்துடன் இவர்களின் காதல் திருமணம் பற்றியும் தெரியாதவர்கள் என்றும் யாரும் இருக்கமாட்டார்கள்.
நடன கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலை அவரின் சமூகவலைத்தளங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனை தொடர்ந்து குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் விலகி அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக மாறி விட்டார்.
ஏனெனின் ரக்சன் பிக்பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்வதால் அந்த இடத்திற்கு மாற்றீடாக மணிமேகலை தொகுப்பாளராக மாறி விட்டார்.
நீண்ட நாள் ஆசை
அந்த வகையில் தற்போது மணிமேகலை தென்னங்கன்று வைப்பது போன்ற ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதில் தன்னுடைய நீண்ட ஆசை நிறைவேறி விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். கிராமத்திலிருந்து இந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் மணிமேகலையின் ரசிகர்கள் மணிமேகலை கிராமத்தில் தான் இருக்கிறார். என்பதனை உறுதிச் செய்துள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் காணொளியை பார்த்த இணையவாசிகள் மணிமேகலையின் வளர்ச்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |