உடல் எடையை குறைத்து ஆளே மாறிய விஜய் டிவி ஜாக்குலின்! ரகசியம் இது தானா?
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலின் உடல் எடையை குறைத்து ஆளே மாறிய அழகிய புகைப்படங்கள் மற்றும் யோகா பயிற்ச்சி செய்யும் காணொளியையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ஜாக்குலின்.இவரும் ரக்ஷனும் இணைந்து தொகுத்து வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட்டானது.

தொகுப்பாளினியாக இருந்தவர் திடீரென நடிப்பிலும் களமிறங்கி விஜய் டிவியிலேயே ஒரு சீரியல் நடித்தார், அதன்பின் திரைப்படங்களிலும் நிறைய நடித்து வந்தார்.

பிஸியாக நடித்து வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றார். இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தது நல்ல வரவேற்பை பெற்றதுடன் ரசிகர்களின் பாராட்டுகளையும் குவித்தது.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜாக்குலின் சமீபத்தில் தனது காதலருடன் டின்னர் டேட்ங் சென்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிய அழகிய புகைப்படங்கள் மற்றும் யோகா பயிற்ச்சி செய்யும் காணொளியையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |