நீண்ட நாட்களுக்கு பிறகு குட் நியூஸ் சொன்ன அமுதவாணன்- குவியும் வாழ்த்துக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நீண்ட நாட்களுக்கு பிறகு அமுதவாணன் நற்செய்தியொன்றை பகிர்ந்துள்ளார்.
அமுதவாணன்
பிரபல தொலைக்காட்சியில் நகைச்சுவை திறமை கொண்டு சாதித்தவர் தான் அமுதவாணன்.
இவர், நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் சீசன் 6வது கலந்துகொண்டார். அதில் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாகவும், அதே நேரத்தில் வேறொரு நிகழ்ச்சிகளில் மாட்டிக் கொண்டதால் நிறைய பட வாய்ப்புகள் தவறி விட்டதாகவும் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
புதிய கார்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமுதவாணன் அவ்வப்போது சில பதிவுகளை பகிர்வார்.
அந்த வகையில், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன்போது குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட படத்தை பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அமுதவாணனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



