பிக்பாஸ் சீசன் 5ல் இந்த சர்ச்சை சீரியல் நடிகரா? கதறும் ரசிகர்கள்! ரிவியின் மாஸ்டர் ப்ளான்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில், பிக்பாஸ் சீசன் 5 எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே 4 சீசன்கள் கடந்த நிலையில், கொரோனா காரணமாக இந்த சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் என ஏற்கனவே நிறைய பிரபலங்களின் பெயர்கள் இணையத்தில் கசிந்து வந்தன. தற்போது, அந்த லிஸ்டில் கடந்த சீசன் போலவே இந்த முறையும் விஜய் டிவி பிரபலங்களையே களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும்.
அதில் ஒரு போட்டியாளர் சீரியல் நடிகர் ஈஸ்வர் என்றும் செய்திகள் வந்துள்ளது. அந்த சீரியல் நடிகர் வேறு யாரும் இல்லை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ஸ்ரீ தன் கணவர் அவரோடு நடிக்கும் மகாலட்சுமியோடு கள்ள உறவில் இருப்பதாக ஒரு புகார் கூறியிருந்தார் அல்லவா? அவரே தான்...

இந்த நடிகரை பிபி-5 ல் களமிறக்குவதற்கு டி.ஆர்.பி தான் காரணமாக இருக்கும் என தெரிகிறது. மேலும், பல ரசிகர்கள் ஷிவாங்கி, மற்றும் அஷ்வினை அழைத்து வர கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்கள் பட வாய்ப்புகளால் பிஸியாக இருப்பதால், இந்த சீசனில் குக் வித் கோமாளி பிரபலங்கள் யார் கலந்துகொள்வார்கள் என்பதில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.