உடைந்த ஹேமாவின் ரகசியம்! அதிர்ந்த கண்ணம்மா… லீக்கான சூட்டிங் ஸ்பாட் காட்சிகளால் பதற்றத்தில் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மாவின் சூட்டிங் ஸ்பாட் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. ஏற்கனவே கண்ணம்மாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த தகவலை கூறி விடுகிறார்.
இதனை கேட்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். இந்தநிலையில் கண்ணம்மாவின் தங்கையான அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது, அங்கு கண்ணம்மாவும் செல்கிறார்.
அப்போது சௌந்தர்யாவிடம் அதிரடியாக கேள்வி எழுப்பும் கண்ணம்மா, எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாக கூறுகிறார்.
நீங்கள் தத்தெடுத்து வளர்க்கும் ஹேமா யார்? அவளை பார்க்க நான் சிறுவயதில் இருந்ததை போலவே இருக்கிறாள், என் மீது மிகவும் பாசமாகவும் இருக்கிறாள். என் குழந்தை தானே அது? என சராமரியாக கேள்வி எழுப்பிகிறார்.
இதனை கேட்ட சௌந்தர்யா, கண்ணம்மாவிற்கு உண்மை தெரிந்து குறித்து அதிர்ச்சியடைந்தவாறு இருக்கிறார்.
இதற்கு பின்னர் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கண்ணம்மா, வெண்பாவிடம் கெஞ்சுவது போல காட்சிகள் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு காட்சிகள் போல இருக்கும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றத்தில் உள்ளனர்.