விஜய் த்ரிஷா பற்றி பேச இது தான் காரணம் - சமுத்திரகனி விளக்கம்
நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து சர்ச்சை பற்றி மகளிர் தினத்தில் பேசிய விடயத்திற்கு சமுத்திரகனி கடுமையாக விஜய்யை எச்சிரித்து பேசியதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து
ஏஜிஎஸ் குழும திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே காரில் ஒன்றாக வந்து கலந்துகொண்டனர்.
ஏற்கனவே விஜய் மனைவி சங்கீதா விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என விவாகரத்து கேட்டிருந்த நிலையில் அவர் திரிஷாவுடன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டது மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது.
இது ஒரு பக்கம் இருக்க மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் விஜய் முதன் முறையாக விவாகரத்து பற்றி பேசினார்.

அதில் விஜய் இப்போது நிறைய பிரச்சனைகள் நடந்து வருகிறது அதை எல்லாம் பற்றி நீங்க பயப்பட தேவை இல்லை நான் பாத்துகிறேன் அது எல்லாம் ஒர்த் இல்லை என்று பேசி இருந்தார்.
விஜய் ஒர்த் இல்லை என்று பேசியது மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல பெண்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நடிகர் சமுத்திரகனியும் விமர்சனம் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் அப்படி பேசியதற்கான காரணம் என்ன என்பதை விளக்கி உள்ளார்.

சமுத்திரகனி பேச்சு
சமுத்திரக்கனி ஆதங்கத்தோடு விஜய்க்கு எச்சரித்து பேசி இருந்தார். தனிப்பட்ட விஷயங்களை நான்கு சுவர்களுக்கு வெளியே கொண்டுவர வேண்டுமா? யாரை நோக்கி பழிவாங்குகிறீர்கள் என்று பேசி இருந்தார்.
இதை விஜயை குறிப்பிட்டு தான் சமுத்திரக்கனி பேசியுள்ளார் என்று இணையத்தில் இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில், அந்த வீடியோ குறித்து சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசும் போது "வீடியோ எடுக்கிறார்கள் என எனக்கு முன்பே தெரியும். முன்னுரையை அந்த தம்பி எடுக்கவில்லை, முடிவுரையை மட்டும் தான் எடுத்தான், சரி எடுக்கட்டும் என விட்டுவிட்டேன்.

எனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேச தெரியாது. சந்தோஷமோ, வலியோ, வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்துவிட்டு நான் அடுத்த தளங்களுக்கு சென்றுவிடுவேன்.
அது வந்துவிட்டது, அதற்கு மேலே மானே தேனே எல்லாம் சேர்த்து தம்பிகள் வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக எல்லாம் நினைக்கவில்லை; பேசிவிட்டு பின் வருத்தமாகவும் நினைக்கவில்லை” என்று வெளிப்படையாக பேசி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |