அப்பாவிற்கே டஃப் கொடுக்கும் விஜய்யின் மகன்! வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் மகன் திருமணம் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் ஷங்கர்
இயங்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கொரோனா காலக்கட்டத்தில் மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நடைபெற்றதால், பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளமுடியவில்லை. பின்பு திருமண வரவேற்பு நடத்துவதாக ஏற்கனவே ஷங்கர் கூறியிருந்தார்.
ஆனால் ஆறு மாதத்திற்குள் தனது கணவரை பிரிந்துவிட்ட நிலையில், தற்போது தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
விஜய் மகன்
இந்த திருமணத்தின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், விஜய் மகனும் கலந்து கொண்டுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
அதேபோல் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சையும் கலந்து கொண்ட புகைப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது.
அந்த போட்டோவில் ஜேசன் சஞ்சை அப்பா விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் குறும்படம் ஒன்றினை இயக்கிய நிலையில், லைகா தயாரிக்கும் ஒரு படத்திற்கும் மும்மரமாக வேலை செய்து வருகின்றாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |