ஒரு விஷயத்தை ஆசையா விஜய்யிடம் கேட்ட தாய் ஷோபா... - உடனே மறுத்துவிட்ட விஜய்...!
ஒரு விஷயத்தை ஆசையா விஜய்யிடம் கேட்ட தாய் ஷோபாவிடம், அதை உடனே விஜய் மறுத்துவிட்டதாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
ஆசையா விஜய்யிடம் கேட்ட தாய் ஷோபா
இந்நிலையில், நடிகர் விஜய் அம்மா ஷோபா குறித்து ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தாய் ஷோபாவிற்கு ரொம்ப நாள் ஒரு ஆசை இருந்து வந்தது. அதாவது, தன் செல்ல மகனுக்கு அம்மாவாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று. ஆனால், அந்த ஆசை இத்தனை ஆண்டுகள் நடக்கவே இல்லை.
தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் ஷோபா முதலில், அவரை தொடர்பு கொண்டு, விஜய்... இந்த படத்தில் நான் உனக்கு அம்மாவாக நடிக்கிறேன் என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய், அதெல்லாம் வேணாம்மா.. நீங்கள் என்கூட நடித்தால், நான் செட்டில் உங்களை பார்த்ததுமே சிரித்துவிடுவேன். என்னால் நடிக்கவே முடியாதும்மா... என்று கூறிவிட்டாராம். விஜய் சொன்னதை கேட்டு ஏமாற்றம் அடைந்தாலும், மகன் சொன்னதில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டு ஓ.கே.. விஜய் என்று கூறிவிட்டாராம்.