Varisu Audio Launch: விஜய் அணிந்திருந்த சட்டையின் விலை- எந்த நாட்டுடையது தெரியுமா?
இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வம்சி.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார், தமன் முதன்முறையாக இசையமைத்துள்ளார்.
இந்தபடத்திலிருந்து வெளியிடப்பட்ட ரஞ்சிதமே பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியுள்ள நிலையில் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் ஓடியோ வெளியீட்டு விழா நடந்தது.
இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கம் போல் அல்லாமல் விஜய் சற்றே குதூகலத்துடன் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தினார்.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
ரசிகர்களுடன் செல்பி வீடியோ குட்டிகதை என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்தார் விஜய்.
இதற்கிடையே இந்நிகழ்ச்சியின் போது விஜய் அணிந்திருந்த சட்டை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது.
அந்த சட்டையின் பின்னால் HKT என எழுதியிருந்தது, இது என்ன புது பிராண்ட் அல்லது விஜய் ஏதாவது சொல்ல வருகிறாரா என கேள்விகள் எழாமல் இல்லை.
லண்டனில் மிகவும் புகழ்பெற்ற ஆடை நிறுவனத்தின் பெயரே இதுவாம், லண்டன் தயாரிப்பாக இருந்தாலும் இந்தியா போன்ற மற்ற நாடுகளிலும் ஆடைகளை வாங்க முடியுமாம்.
இந்திய ரூபாய் மதிப்பின்படி அல்லாமல், யூரோ மற்றும் டொலரில் கிடைக்கும் என தெரிகிறது.
தற்போது பண்டிகை காலம் என்பதால் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் குறைந்த விலை ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான விலையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.