விஜய்சேதுபதியின் தங்கையா இவங்க? என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
சினிமாவில் துணை நடிகராக வாழ்வை தொடங்கி இன்று சூப்பர் டூப்பர் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி.
தன்னுடன் நடிக்கும் சக மனிதர்களை நண்பர்களாக பாவித்து அனைவருடனும் சகஜமாக பழகக்கூடியவர்.
வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து படத்தை தாங்கிபிடிக்கக்கூடியவர்.
இப்படி விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வு பற்றி தெரிந்த பலருக்கும், அவரது குடும்ப வாழ்க்கை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
விஜய் சேதுபதியின் குடும்பம்
மதுரையில் பிறந்த விஜய் சேதுபதிக்கு ஓர் தங்கை உண்டாம், அவரது பெயர் ஜெயஸ்ரீ, மதுரையில் இருந்த இவர்கள் சில ஆண்டுகளில் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
தன்னுடைய தங்கையை மிகுந்த பாசமாக பார்த்துக் கொள்வாராம் விஜய் சேதுபதி, பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் உணவு கொடுப்பதில் இருந்து பள்ளிக்கு அனுப்பும் வரை அனைத்து வேலைகளையும் அவரே செய்வாராம்.
சொந்தமாக Boutique
ஜெயஸ்ரீ, தன்னுடைய பள்ளி நண்பர்களுக்கு கூட தான் விஜய் சேதுபதியின் தங்கை என்பது தெரியாது, கல்லூரி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
பலரும் என்னிடம் நீங்கள் தான் உண்மையான தங்கையா? என்றெல்லாம் கேட்பதாக தெரிவித்துள்ளார்.
ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்ட ஜெயஸ்ரீ, அதுதொடர்பான படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக இறைவி என்ற Boutiqueயை நடத்தி வருகிறார்.
பட்டு முதல் மாடர்ன் வரை அனைத்து வகையான ஆடைகளும் இருப்பதாகவும், தொழில் சிறந்த முறையில் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.