அடேங்கப்பா..! விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
விக்ரம் படத்தின் வெற்றியால் நடிகர் விஜய் சேதுபதி தனது சம்பளத்தினை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான்.
விக்ரம் படத்தினை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு மற்ற மொழி படங்களில் இருந்தும் குவிந்து வருகின்றது.

குவியும் வில்லன் வாய்ப்பு
அந்த வகையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவிருக்கும் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார்.
அதன் படி விஜய் சேதுபதி புஷ்பா 2 படத்திற்காக 35 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதற்காக வாங்கும் சம்பளத்தை விட வில்லனாக நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்குகின்றாராம்.
